Home Tamil Cinema News பட வாய்ப்பு இல்லாததால் சினிமாவை விட்டு டிசைனிங் ஷோரூம் துவங்கிய மனிஷா யாதவ்!

பட வாய்ப்பு இல்லாததால் சினிமாவை விட்டு டிசைனிங் ஷோரூம் துவங்கிய மனிஷா யாதவ்!

88

manisha-yadav-trisha-illana-nayanthara

தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் மீண்டும் தனக்கொரு நிரந்தர இடம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த மனிஷாவுக்கு அப்படம் வியாபார ரீதியாக மட்டுமே வெற்றியை தேடி தந்துள்ளது. மற்றபடி அவருடைய இமேஜையே கெடுத்துவிட்டது.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம் என்று ஆசையுடன் இருந்த மனிஷாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் வராதது வருத்தத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று முடிவு செய்துள்ள மனிஷா பெங்களூரில் பெண்களுக்கான ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வடிவமைக்கும் டிசைனிங் ஷோரூம் ஒன்றை தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகை மனிஷா யாதவ்  தமிழில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். வழக்கு எண் 18/9 படத்திற்கு பின் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here