Home Tamil Breaking News ஏர் இந்தியா ஊழியர்கள் மீது நடவடிக்கை : விமான போக்குவரத்து இயக்ககம்

ஏர் இந்தியா ஊழியர்கள் மீது நடவடிக்கை : விமான போக்குவரத்து இயக்ககம்

29

ஏர் இந்தியா ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய வர்த்தக விமானிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

விமானம் புறப்படுவதற்கு முன்பும், பயணம் முடிந்த பின்னரும் அதன் விமானிகளும், கேபின் ஊழியர்களும் மது சோதனைக்கு உடன்படுவார்கள். இந்த சோதனையை தவிர்த்து வந்ததாக ஏர் இந்தியாவின் 130 விமானிகள் மற்றும் 430 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக விமான போக்குவரத்து இயக்ககம் அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய வர்த்தக விமானிகள் சங்கம், தெளிவற்ற நடைமுறைகளால் விதிமீறல் நடந்ததாக கூறினால் அதற்கு விமான ஊழியர்கள் பொறுப்பாக மாட்டார்கள் என்று தெரிவித்தது.

ஏர் இந்தியா ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தது.