Home Tamil Cinema News இது நம்ம ஆளு படத்தில் ஆடியது குறித்து ஸ்ருதி விளக்கம்

இது நம்ம ஆளு படத்தில் ஆடியது குறித்து ஸ்ருதி விளக்கம்

173

9c6ee0a1-156f-4d6a-9207-abd68b6227ea

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் இது நம்ம ஆளு. சிம்பு-நயன்தாரா காதல் முறிவிற்குப் பின் இருவரும் ஜோடி சேர்ந்துள்ள படம் இது என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இப்படத்தில் இன்னும் இரண்டு குத்துப் பாடல்களைச் சேர்க்க சிம்பு தரப்பு விரும்புவதாகவும், ஆனால் அவற்றிற்கு தேதிகள் ஒதுக்க நயன்தாரா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா கொடுத்த தேதிகளை படக்குழு வீணடித்து விட்டதாக இயக்குநர் பாண்டிராஜூம் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவிற்குப் பதில் ஸ்ருதி அந்தப் பாடலில் ஆடியிருப்பதாக தகவல்கள் உலா வந்தன. ஆனால், அவை அனைத்தும் வெறும் வதந்தி தான் என ஸ்ருதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கடந்தாண்டு இப்படத்திற்கென தான் பாடல் பாடியது உண்மை தான் என்றும், ஆனால் அப்படத்தில் தான் பாடல் எதிலும் தோன்றி நடனம் ஆடவில்லை என்றும் ஸ்ருதி ஹாஸன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.