Home Tamil Cinema News ஒரே நாளில் உதயநிதி, பாபி சிம்ஹா படங்கள் வெளியீடு

ஒரே நாளில் உதயநிதி, பாபி சிம்ஹா படங்கள் வெளியீடு

120

Kollywood-news

அறிமுக இயக்குனர் சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, பாலசரவணன் ஆகியோர் நடித்து பொலிடிக்கல் த்ரில்லர் படமாக உருவாகிவருகிறது ’கோ-2’. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வர, இப்படத்தை அடுத்த மாதம் ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதே நாளில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வரும் மனிதன் திரைப்படத்தையும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அஹமத் இயக்கி வரும் இப்படத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை தொடர்ந்து மீண்டும் உதயநிதியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஹன்சிகா.

வழக்கமாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை அமைப்பார். ஆனால் இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பினை சந்தோஷ் நாராயணனிடம் வழங்கியுள்ளார்கள்.

ஏப்ரல் 29ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் இந்த இரண்டு படங்களிலும் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடங்களை ஏற்று நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.