Home Tamil Breaking News திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை

11

தமிழகத்தில் அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் நீடித்து வருகிறது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர், டிடிவி தினகரன் தலைமையிலான அணியினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்துள்ளனர்.இதனால் அ.தி.மு.க ஆட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறி, பெரும்பான்மையை நிருபிக்க உடனே உத்தரவிட வேண்டும் என்று கவர்னர் வித்யாசாகரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தான். அதனால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துள்ளனர். இதில், கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா, ஆர்எஸ் பாரதி, டி. ராஜா, சீதாராம் யெச்சூரி, காங்கிரஸின் ஆனந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தமிழக அரசியல் சூழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவரை சந்தித்தோம்,தமிழக கவர்னர் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது என டி.ராஜா கூறினார்.

தமிழக அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது, ஜனாதிபதி நடவடிக்கைக்கு பின்பு அடுத்தக்கட்ட முடிவு குறித்து அறிவிக்கப்படும் என தி.மு.க எம்.பி. கனிமொழி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here