Home Tamil Breaking News ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஓ. பன்னீர் செல்வம்.. ஒருங்கிணைப்பு குழு துணைத்தலைவராக எடப்பாடி பழனிசாமி..

ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஓ. பன்னீர் செல்வம்.. ஒருங்கிணைப்பு குழு துணைத்தலைவராக எடப்பாடி பழனிசாமி..

20

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி இல்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.

பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சி விதி 19-ல் விதிகளில் திருத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சி அணிகள் இணைந்ததை வரவேற்ற தீர்மானம் நிறைவேற்ற பின்னர் இரட்டை இலையை மீட்கும் தீர்மானம், தினகரன் நியமனமும், அவரது அறிவிப்புகளும் செல்லாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதாவால் முன்னர் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் அவரவர் பொறுப்புகளில் தொடர்வார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முக்கிய தீர்மானமாக கட்சியில் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே இனி பொதுச்செயலாளர் பதவி இல்லை என்று தீர்மானம் போடப்பட்டது. கட்சியின் வழிக்காட்டுதல் குழுவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டு வழிகாட்டு குழுத்தலைவர் ஓபிஎஸ், இணைத்தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி கட்சியில் முடிவெடுக்கக்கூடிய முழு அதிகாரம் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமிக்கு உண்டு என்றும் வழிகாட்டு குழு மூலம் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேறியது.

கட்சியிலிருந்து ஒருவரை நீக்கவும், இணைக்கவும் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு அதிகாரம் தரும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் கட்சியின் முழு அதிகார அமைப்பாக ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிச்சாமியும் மாறியுள்ளனர்.

Related Posts