Home Tamil Breaking News இன்று முதல் ‛ஒரிஜினல் லைசென்ஸ்’ வைத்திருப்பது கட்டாயம்

இன்று முதல் ‛ஒரிஜினல் லைசென்ஸ்’ வைத்திருப்பது கட்டாயம்

33

சென்னை: ‘வாகனம் ஓட்டுவோர், ‘ஒரிஜினல் லைசென்ஸ்’ வைத்திருக்க வேண்டும்’ என்ற அரசின் உத்தரவு, இன்று (செப்.,1) முதல் கட்டாயமாகிறது. மீறுவோர் மீது, சட்ட நடவடிக்கை பாயும் என, காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில், டூ – வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு என, தனித்தனி லைசென்ஸ் வழங்கப்படுகிறது. லைசென்ஸ் பெற, பல படி நிலைகள் உள்ளதால், வாகன ஓட்டுனர்கள், ஒரிஜினல் லைசென்சை, பாதுகாப்பாக வீட்டில் வைத்து விட்டு, அதன் நகலை மட்டும் வைத்திருப்பர்.

இந்நிலையில், வாகன விபத்துக்களால், உயிர் இழப்பு அதிகரிப்பதை அடுத்து, வாகனம் ஓட்டுவோர், ஒரிஜினல் லைசென்சை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது கட்டாயம்தான் என்று உத்தரவிட்டனர்.

இதனையடுத்து அரசு ஆணைப்படி, இன்று(செப்., 1) முதல், வாகன ஓட்டுனர்கள், ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என, காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, வாகன ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.