Home Tamil Movie Reviews ஒரு நாள் இரவில் – விமர்சனம்

ஒரு நாள் இரவில் – விமர்சனம்

296
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating
2.5

இயக்கம்: ஆன்டனி

ஒளிப்பதிவு: எம்எஸ் பிரபு

இசை: நவீன்

தயாரிப்பு: ஏஎல் அழகப்பன், சாம் பால்

நடிப்பு: சத்யராஜ், அனுமோள், யூகி சேது, ஆர் சுந்தர்ராஜன், வருண்

மலையாளத்தில் ஹிட்டடித்த ‘ஷட்டர்’ படத்தின் ரீமேக், எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில் உருவான முதல் படம், ‘பாகுபலி’க்குப் பிறகு சத்யராஜ் நடிப்பில் வெளியாகும் படம் என்ற இந்த காரணங்களே ஒரு நாள் இரவில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின.

oru

சிங்கப்பூர் ரிட்டர்ன் சத்யராஜ் கொஞ்சம் பசையுள்ள பார்ட்டி. மனைவி, இரு குழந்தைகள் என கவுரவமான குடும்பம். மூன்று கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு கடை காலியாக இருக்க, அதை நண்பர்களுடன் சரக்கடிக்க பயன்படுத்துகிறார்.

டீன் ஏஜ் மகள் ஒழுக்கத்தில் கறார் காட்டும் அப்பா, ஒரு கட்டத்தில் தானே அந்த ஒழுக்கக்கேடான செயலில் இறங்குகிறார். அது எது? ஏன்? அதற்குப் பிறகு என்ன ஆகிறது? என்பது மீதிக் கதை.

மலையாளத்தில் உருவான ‘ஷட்டர்’ படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, விருதும் வென்றிருக்கிறது. அந்தப் படத்தை தமிழில் உருவாக்கி இயக்குநராக புரமோஷன் ஆகியிருக்கும் எடிட்டர் ஆண்டனியை லைக் செய்யலாம்.

21-1448092635-oru-naal-iravil--12-600வீட்டில் ஒரு பிரச்சினை. மகள் தன் ஆண் நண்பனுடன் சகஜமாகப் பழகுவதை தவறாக நினைத்து, திடீரென ஒரு நாள் கல்லூரியை விட்டு நிறுத்தி, கல்யாண ஏற்பாடு செய்கிறார். வீட்டில் தகராறு. டென்ஷனில் கடைக்குள் நண்பர்களுடன் சரக்கடிக்கிறார். நண்பர்கள் சென்ற பிறகு, தனது ஆஸ்தான ஆட்டோ ஓட்டுநர் பையனை அழைத்துக் கொண்டு மேலும் சரக்கு வாங்கக் கிளம்புகிறார். அப்போதுதான் பஸ் ஸ்டாண்டில் ‘கஸ்டமருக்காகக்’ காத்திருக்கும் அனு மோளைப் பார்க்கிறார்.

மனதில் சபலம் தட்டும் நேரம், அனுமோளும் அவரைப் பார்த்து கண்ணசைக்க, ஆட்டோ பையனே ரேட் பேசி அழைத்து வருகிறான். எந்த ஹோட்டலிலும் ரூம் போட முடியாத சூழல். சரி, காலியாக இருக்கும் கடைக்குள்ளேயே வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து உள்ளே போகிறார்கள். அப்போது அனுமோள் சாப்பாடு கேட்கிறாள். கடையின் ஷட்டரை வெளிப்பக்கம் பூட்டிவிட்டுப் போகிறான் பையன். போனவன் போனவன்தான்… குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டியதாக போலீசில் மாட்டிக் கொள்கிறான். அடுத்த நாள் இரவு வரை அவன் ஷட்டரைத் திறக்க வரவே இல்லை.
1_2527165g_2628164fகடைக்குள் மாட்டிக் கொண்ட சத்யராஜ் – அனுமோள் நிலை என்ன? எப்படி வெளியே வந்தார்கள்? அந்தப் பையன் திரும்பி வந்தானா? என்பதெல்லாம் திரையில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யங்கள்.

கறாரான அப்பா, கண்டிப்பான கணவன், சின்னதாய் தோன்றும் சபல எண்ணத்திலும் மோகம் காட்டாத முகம், பதற்றம், பரிதவிப்பு, குழப்பம், பயம், அழுகை, சந்தேகம், யோசனை என அனைத்து உணர்வுகளையும் கண்முன் நிறுத்துகிறார் சத்யரஜ். கதாபாத்திரத்தின் தேவையறிந்து அதை உணர்வுபூர்வமாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.

ஷட்டரிலிருந்து வெளியே வந்த பிறகு வீட்டில் மனைவியைப் பார்க்க முடியாமல், மகளை எதிர்கொள்ள முடியாமல் அவர் தவிப்பதும், கலங்குவதும் க்ளாஸ் நடிப்பு. அவருக்கு அதிகபட்சம் ஒரு பக்க வசனம் மட்டும்தான்.

oruu

கால் கேர்ளாக வரும் அனுமோள் ஆடையை விலக்காமலேயே அபாரமான கவர்ச்சியைக் காட்டுகிறார். பிரமாதமான நடிப்பு. தான் யார் என்பதை தன் நண்பன் தெரிந்து கொண்டதை உணரும் அந்த நொடியில் அவர் காட்டும் ‘எக்ஸ்பிரஷன்’ அடேங்கப்பா…! பாசாங்கு இல்லாத இயல்பான நடிப்பில் அனு மோல் ஈர்க்கிறார்.

யூகி சேது, ஆட்டோ டிரைவராக வரும் அறிமுக நடிகர் வருண், சத்யராஜ் மகளாக நடித்திருக்கும் தீக்‌ஷிதா கோத்தாரி, சத்யராஜ் மனைவியாக நடித்த கல்யாணி நட்ராஜன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

இயக்குநராக முதல் படத்தை பாதுகாப்பாகத் தேர்வு செய்துள்ளார் ஆன்டனி. எடிட்டரே இயக்குநர் என்பதால் செம ஷார்ப்பாக ‘கத்தரி’ போட்டிருக்கிறார். இயல்பான, உறுத்தாத பின்னணி இசை.

அனு மோல் பின்னணி தெரிந்த பிறகு எந்த பதற்றமும் இல்லாமல், அலட்டாமல் சாதாரணமாக யூகி சேது இருப்பது நெருடல். அந்தச் சிக்கலான சூழ்நிலையை சத்யராஜ் எப்படி கடந்து வரப் போகிறார்? என்பதுதான் திரைக்கதையின் மிகப் பெரிய யுத்தி. ஆனால், அதில் எந்த பதற்றத்தையும் பார்வையாளர்களுக்குக் கடத்தவில்லை. இதைத் தவிர்த்துப் பார்த்தால் ‘ஒரு நாள் இரவில்’ ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.