Home Tamil Movie Reviews ஒரு நாள் கூத்து – விமர்சனம்

ஒரு நாள் கூத்து – விமர்சனம்

481
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

இது நாள் வரை ரேடியோ ஜாக்கியாக இருந்த நெல்சன் வெங்கடேசன் முதன்முதலாக எழுதி, இயக்கி ‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்து ராஜ், கருணாகரன், ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக், சார்லி, ஈ. ராமதாஸ் என ஒரு பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடிக்க, கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார்.ஜெ தயாரிப்பில் வெளிவந்திருக்கும் தரமான படமே ‘ஒரு நாள் கூத்து’.

3.2
இயக்கம்: நெல்சன் வெங்கடேசன்
ஒளிப்பதிவு: கோகுல்
இசை: ஐஸ்டின் பிரபாகரன்
தயாரிப்பு: கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார்.ஜெ
நடிகர்கள்: அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்து ராஜ், கருணாகரன், ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக், சார்லி, ஈ. ராமதாஸ்

Oru_Naal_Koothu_Krishab786

இது நாள் வரை ரேடியோ ஜாக்கியாக இருந்த நெல்சன் வெங்கடேசன் முதன்முதலாக எழுதி, இயக்கி ‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்து ராஜ், கருணாகரன், ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக், சார்லி, ஈ. ராமதாஸ் என ஒரு பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடிக்க, கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார்.ஜெ தயாரிப்பில் வெளிவந்திருக்கும் தரமான படமே ‘ஒரு நாள் கூத்து’.

 

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பரபரப்பான விபத்துடன் தொடங்குகிறது. யாருக்கு விபத்து என தெரிவதற்குள் ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கின்றது. அட்டகத்தி தினேஷ் மற்றும் நிவேதா ஐடியில் பணிபுரிந்து ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர்.

அவ்வபோது செல்லமாக சண்டை, ஈகோ மோதல் பின் சந்தோஷம் என ஜாலியாக செல்கிறது இவர்கள் காதல். ஆனால், திருமண பேச்சு எடுத்தால் தினேஷ் தன் குடும்ப சூழ்நிலை கூறி பின் வாங்குகிறார்.அதேபோல் படித்துவிட்டு பல வருடமாக திருமணமே ஆகாமல் இருக்கும் மியா ஜார்ஜ், இந்த வருடமாவது திருமணம் ஆகிவிடுமா என்ற ஏக்கத்தில் வாழ்கிறார்.

Oru-Naal-Koothu-Movie-Video-Songs

ஆர்.ஜே வாக ரித்விகாவும் கிட்டத்தட்ட மியா ஜார்ஜ் போல் திருமணத்திற்கு ஏங்கும் கதாபாத்திரம். இந்த மூன்று கதாபாத்திரங்களின் விருப்பமும் நிறைவேறியதா என்பதை இயக்குனர் கொஞ்சம் ஜாலியாகவும், கொஞ்சம் எமோஷ்னலாகவும் கூறியிருக்கும் கதை தான் ஒரு நாள் கூத்து.

 

ஏழ்மையான குடும்பத்தில் இருந்து பெரிய படிப்பு படித்து முடித்து ஐ.டி.கம்பெனியில் வேலை பார்க்கும் ராஜ்ஜாக ‘அட்டக் கத்தி’ தினேஷ் அட்டகாசம்.

தள்ளி தள்ளி போகும் திருமணம் எப்படியாவது நடந்தேறினால் சரி என., வரன் பார்க்க வந்தவன், ஓடிப் போகலாம்… என வரச் சொன்னான் என்பதற்காக சென்னை வந்து வீண் பழிக்கு ஆளாகி திரும்பிபோகும் லஷ்மியாக மியா ஜார்ஜ் தன் நடிப்பில் அனைவரையும் பலமுறை கைதட்ட வைக்கிறார்.

Oru-Naal-Koothu

காதலனின் கமிட்மெண்ட்ஸ்க்காக காத்திருக்கவும் முடியாமல், தன் குடும்ப ஸ்டேட்டஸ்ஸையும் விட்டுத் தர முடியாமல் மாற்றானுக்கு கழுத்து நீட்ட சம்மதித்துவிட்டு காதலனுடன் முத்தக் கண்ணாமூச்சி விளையாடும் ஹைலெவல் ஐ.டி.வாலிபி காவ்யாவாக புதுமுகம் நிவேதா பெத்து ராஜ் செம சிறப்பய்யா!

திருமணத்திற்கு காத்திருந்து காத்திருந்து சலித்துப் போய், சக நண்பனுடன் பெங்களூர் ஆபிஸ் டிரிப்பில் திருமணத்திற்கு பிந்தைய உறவில் ஈடுபட்டு முடிந்ததும், இதற்கு தான் இத்தனைகளோபரமா என்று கேட்டபடி, நிச்சயத்த பின் திருமணத்திற்கு மறுக்கும் மாப்பிள்ளையை கெஞ்சி கூத்தாடி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து கழட்டி விடும் எப் எம் ஜாக்கி சுசீலாவாக மெட்ராஸ் ரித்விகா அருமை.

Oru-Naal-Koothu-Trailer1

சுசிலா–ரித்விகாவின் ஆண் நண்பனாக ஆபிஸ் நண்பனாக ரமேஷ் திலக், சோல்டர் மோகனாக, நாயகர் ராஜ்ஜின் நண்பனாக பால சரவணன், சுசிலா -ரித்விகாவின் சோக சகோதரராக கருணாகரன், அவரின் திருமணத்திற்கு ஏங்கும் நண்பராக சார்லி உள்ளிட்ட எல்வோரும் படத்தில் பாத்திரமறிந்து பளிச் சிட்டுள்ளனர்.

ஐஸ்டின் பிரபாகரன் இசையில் தினேஷ்-நிவேதாவிற்கு வரும் டூயட் பாடல் இன்னும் பல வருடங்களுக்கு ஹிட் மெலோடி லிஸ்டில் இடம்பெறும். பின்னணி இசையில் ஒரு சில காட்சிகளில் இசையே வசனத்தை விட ஆக்ரமிப்பு அதிகம். கோகுலின் ஒளிப்பதிவு மூன்று கதைகளையும் நன்றாக வித்தியாசப்படுத்தி காட்டுகின்றது.

மொத்தத்தில் ”ஒரு நாள் கூத்து” – ஒரு நாள் பார்க்கக்கூடிய கூத்து தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here