Home Tamil Cinema News இதுக்கு நம்ம ஊர் டவுன் பஸ் தேவலாம்டா என கூறிய சூரியின் அம்மா

இதுக்கு நம்ம ஊர் டவுன் பஸ் தேவலாம்டா என கூறிய சூரியின் அம்மா

145

soori_amma

சூரி தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நகைச்சுவை நடிகர்களின் முதல் இடத்தில் உள்ளார். இவர் கையில் தற்போது பல படங்கள் இருக்கின்றது.

பல முண்ணனி நடிகர்களுடன் இவர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இவரது அம்மாவுக்குவிமானத்தில் பறப்பது தான் நீண்ட நாள் ஆசையாக இருந்ததாம்.

இதனால் விமானத்தில் சமீபத்தில் அழைத்து சென்றுள்ளார். இந்த விமான பயணத்தின் போது சூரியின் அம்மா, ‘என்னடா இது இப்படியிருக்கு, இதுக்கு நம்ம ஊர் டவுன் பஸ் தேவலாம்டா’ என கூறியுள்ளாராம்.

இதை சந்தோஷத்துடன் தன் டுவிட்டர் பக்கத்தில் சூரி “அம்மாவின் முதல் விமானபயணம். என்னதான் இருந்தாலும் நம்மூரு பஸ்மாதிரி வராதுப்பானு அம்மா சொல்ல, பைலட்டே தெறிச்சிட்டாரு..” என்று பகிர்ந்துள்ளார்.