Home Tamil Cinema News திடீர்னு முடிவு எடுத்த ஓவியா: அப்போ ‘மருத்துவ முத்தம்’ ஆரவ் கதி?

திடீர்னு முடிவு எடுத்த ஓவியா: அப்போ ‘மருத்துவ முத்தம்’ ஆரவ் கதி?

26

சென்னை: சிங்கிள் மற்றும் திருப்தியாக உள்ளேன் என்று ஓவியா ஸ்டேட்டஸ் போட்டுள்ளதை அவரது ஆர்மிக்காரர்கள் கொண்டாடி வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நடிகை ஓவியா ஆரவ் மீது காதல் வயப்பட்டார். ஆரவ் தனது காதலை ஏற்க மறுத்தவுடன் மனமுடைந்த ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தாலும் இன்னும் ஆரவை காதலிப்பதாக தெரிவித்து வந்தார் ஓவியா.

உனக்கு அந்த ஆரவ் பயபுள்ள வேண்டாம் செல்லக்குட்டி, சொன்னா கேளு விட்டுடு என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் தங்களின் தலைவிக்கு சமூக வலைதளங்கள் மூலம் அறிவுரை வழங்கி வந்தனர்.

சிங்கிளாகவும், திருப்தியாகவும் உள்ளதாக ஓவியா இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூப்பரே!! மீண்டும் ஆரவ் பேர சொன்னீங்க மூஞ்சில ஸ்ப்ரே அடிச்சுபுடுவேன் என ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

தட் கெத்து மொமெண்ட் ஃபார் பாய்ஸ் 😁😂💪 #OviyaArmy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here