Home Tamil Cinema News நடிகர் அனுபம் கெருக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுப்பு

நடிகர் அனுபம் கெருக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுப்பு

98

anupam-kher

நடிகர் அனுபம் கெருக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்க மறுத்து விட்டது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் வரும் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெறவுள்ள இலக்கிய விழாவில் பங்கேற்க வருமாறு 18 இந்திய பிரபலங்களுக்கு விழா அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

அவர்களில் சமீபத்தில் மத்திய அரசால் பத்மபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் அனுபம் கெர்ரும் ஒருவராவார். சிறப்பு அழைப்பாளர்களில் 17 பேருக்கு விசா வழங்கியுள்ள பாகிஸ்தான் அரசு, நடிகர் அனுபம் கெருக்கு மட்டும் விசா வழங்க மறுத்து விட்டது.

விசா மறுப்புக்கு கவலை தெரிவித்துள்ள அனுபம் கெர் அது பற்றி கூறிகையில், பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவில் நிகழ்ச்சிகளை நடத்த நாம் அழைப்பு விடுக்கிறோம். ஒரு இடத்தில் அவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பினாலும், சில இடங்களில் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நம் நாட்டு மக்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர்.

இதேபோல் கராச்சி இலக்கிய விழாவில் பங்கேற்று அங்குள்ள மக்கள் மனதில் இந்தியர்களைப் பற்றி பதிந்துள்ள தவறான அபிப்ராயங்களை நீக்கலாம் என்று நம்பிக்கை வைத்திருந்தேன். அந்த நம்பிக்கை வீணாகி விட்டது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விசா மறுக்கப்பட்டது தொடர்பாக என்ன கருதுகிறீர்கள் என்ற நிருபரிகளின் கேள்விக்கு பதிலளித்த அவர், எனக்கு தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை நான் காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்தவன் என்பதாலோ, அல்லது, சகிப்புத்தன்மையின்மைக்கு எதிரான எனது மாறுபட்ட கருத்துகளுக்காகவோ என்னை பாகிஸ்தானுக்குள் அனுமதிக்க அவர்கள் மறுத்திருக்கலாம் என கூறினார். இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here