Home Tamil Cinema News கதகளி படத்தில் பாண்டிராஜ் கையாண்ட புதிய யுக்தி

கதகளி படத்தில் பாண்டிராஜ் கையாண்ட புதிய யுக்தி

169

00-feature54

பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கதகளி. இதில் விஷாலுக்கு ஜோடியாக மெட்ராஸ் படத்தில் நடித்த கேத்ரீன் தெரசா நடித்து வருகிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக விருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படம் பற்றிய ஒரு ரகசியம் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது, இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். அவர் இப்படத்திற்காக 4 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அந்த 4 பாடல்களும் படத்தின் முதல் பாதியிலேயே இடம்பெற்று விடுமாம்.

இடைவேளைக்கு பிறகு படத்தில் எந்தவொரு பாடலும் இடம்பெறாதாம். காரணம், இடைவேளைக்கு பிறகு கதை மிகவும் விறுவிறுப்பாக செல்லுமாம். அந்த விறுவிறுப்புக்கு தடை போட்டுவிடக்கூடாது என்பதற்காக இடைவேளைக்கு பிறகு எந்த பாடலையும் வைக்கவில்லையாம்.