Home Tamil Breaking News தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

41

தமிழ்நாடு, அசாம், பீகார், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அசாம் ஆளுநராக ஜகதீஷ் முகி, பீகார் மாநிலத்திற்கு சத்தியபால் மாலிக், மேகாலயா ஆளுநராக கங்கா பிரசாத், அருணாச்சல பிரதேசத்தின் ஆளுநராக பி.டி.மிஸ்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பன்வாரிலால் புரோஹித்தை தமிழக ஆளுநராக நியமித்துள்ளார். 77 வயதான இவர் , மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர். நாக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக 3 முறை பன்வாரிலால் பணியாற்றியவர். பார்வர்டு பிளாக், காங்கிரஸ் கட்சியில் இருந்த பன்வாரிலால் பின்னர் பாஜகவில் சேர்ந்தார்.

2016ல் ஆஸிம் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். 2017ல் மேகாலயா மாநில ஆளுநர் பொறுப்பு பன்வாரிலாலுக்கு கூடுதலாக தரப்பட்டது. தனிக்கட்சி தொடங்கி நடத்திய இவர், ஒரு முறை ராஜயசபை எம். பி. ஆகவும் இருந்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here