பார்த்திபன் புதிய படத்தின் பெயர் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’

பார்த்திபன் புதிய படத்தின் பெயர் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’

89

Parthiban

பார்த்திபன் கடைசியாக இயக்கிய படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. இவர் இயக்குநர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டவராவார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்துக்கு பின் நடிக்க மட்டுமே செய்த பார்த்திபன் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

அவரது அடுத்த படத்துக்கு ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இப்படம் குறித்து பார்த்திபன் கூறுகையில் ‘இப்படத்தில் நானும், தம்பி ராமையாவும் நடிப்பது உறுதியாகியுள்ளது.

சத்யா இசையமைக்கிறார். நாயகன், நாயகி யாரென்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. கண்டிப்பாக இப்படம் அனைவரையும் கவரும்’ என்று தெரிவித்துள்ளார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY