Home Tamil Movie Reviews பசங்க 2 – விமர்சனம்

பசங்க 2 – விமர்சனம்

340
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

குழந்தைகளை தன் போக்கில் வளர விடுவதா? பெற்றோர்களுக்காக மாறுவதா? என்ற சிக்கல்களுக்கான தீர்வை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

குழந்தைகள், பெற்றோர் ஒன்றாக பார்க்கவேண்டிய படம் பசங்க 2.

3
இயக்கம்: பாண்டிராஜ்
ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம்
இசை: அரோல் கொரெலி
தயாரிப்பு: 2 டி எண்டர்டெயின்மென்ட் & பசங்க புரடக்ஷன்ஸ்
நடிகர்கள்: சூர்யா, கார்த்திக்குமார், முனிஸ்காந்த ராமதாஸ், அமலா பால், பிந்து மாதவி, வித்யா பிரதீப்

இயக்குனர் பாண்டிராஜ் பசங்க, மெரினா போன்ற குழந்தைகள், சிருவர்களுக்கான படங்களை எடுத்த பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா எனும் கமர்ஷியல் ஹிட் கொடுத்து பிறகு மீண்டும் யு டர்ன் அடித்து குழந்தைகளை மையமாக வைத்து இயக்கியுள்ள படம் பசங்க 2.

surya

சூர்யா, கார்த்திக்குமார், முனிஸ்காந்த ராமதாஸ் உள்ளிட்டோர் கதையின் நாயகர்களாகவும், அமலா பால், பிந்து மாதவி, வித்யா பிரதீப் ஆகியோர் நாயகிகளாகவும், பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்ய ஆரெல் கரோலி இசையில் ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மென்ட் & இயக்குனர் பாண்டிராஜின் பசங்க புரடக்ஷன்ஸூம் இணைந்து தயாரித்து படத்தை வழங்கியுள்ளனர்.

நிஷேஷ், தேஜஸ்வினி என்ற இரு சுட்டிகளும் துறுதுறு சுறுசுறுவென்று ஜாலியாக பிடித்ததை மட்டும் செய்கிறார்கள். இவர்களை சமாளிக்க முடியாமல் பள்ளிக்கூடங்கள் திண்டாடுகின்றன. இவர்களின் பெற்றோர் அடிக்கடி ஸ்கூல் மாற்றியே கடுப்பாகிறார்கள். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் ஒரு முடிவை எடுக்கிறார்கள்? அது என்ன முடிவு? அந்த குழந்தைகள் என்ன ஆகிறார்கள்? என்பது மீதிக் கதை.

pasanga-2

குழந்தைகள் உலகையும், அவர்களின் எண்ணங்களையும், கனவுகளையும், நடத்தைகளையும் நெருக்கமும் உருக்கமுமாக காட்டியதற்காக இயக்குநர் பாண்டிராஜைப் பாராட்டலாம்.

கவினாக நடித்த நிஷேஷ், நயனாவாக நடித்த வைஷ்ணவி ஆகிய இருவரும் புதுமுகங்கள். ஆனால், அவர்களின் சேட்டைகள், குறும்புகளுக்கும் தியேட்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறது. நிஷேஷின் டான்ஸ் ஃபெர்பாமன்ஸுக்கு அரங்கம் அதிர்கிறது. வைஷ்ணவியின் பிஞ்சுக் குரலில் இருக்கும் தவிப்பைப் பார்த்து கண்கள் கசிகின்றன. இந்த சுட்டிகளுக்கு தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.

Pasanga-2 (1)

அடங்காத பையனை வைத்துக்கொண்டு அவதிப்படும் அப்பாவாக முனீஸ்காந்த் பின்னி இருக்கிறார். கார்த்திக் குமார், பிந்து மாதவி, வித்யா ஆகியோர் பொருத்தமான தேர்வு.

கதையின்நாயகியராக அமலா பால் டீச்சராக சற்றே அலட்டல் என்றாலும், மிரட்டல். ஆனால், நிஜத்தில் திருமணம் ஆகி விட்டதாலோ என்னவோ., கணவராக இதில் நடித்திருக்கும் சூர்யாவுடன் அம்மணிக்கு இல்லை ஒட்டுதல்… கார்த்திக்குமாரின் ஜோடியாக வரும் பிந்து மாதவி, முனிஸ்’ஸின் ஜோடி வித்யா பிரதீப் இருவரும் நடிப்பில் அமலாவைக் காட்டிலும் இயல்பாக நடித்து இயன்றவரை ஸ்கோர் செய்திருப்பது ஆறுதல்.

Amala-Paul

படத்தின் கதை நகர்த்தலுக்கு முக்கியமான கருவியாக சூர்யா செயல்படுகிறார். ஆனால், அவர் அறிவுரை சொல்லும்போதுதான் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. இன்னும் கௌதம் மேனன் படத்தில் பேசுவதைப் போலவே எல்லா இடங்களிலும் பேசுவது படத்திற்கு பொருந்தவில்லை. டயலாக் டெலிவரியை மாத்தியிருக்கலாம்.

பாலசுப்ரமணியத்தின் கேமரா குழந்தைகள் உலகை வண்ணமயமாகக் காட்டி இருக்கிறது. தன் ஒளிப்பதிவு மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் பாலசுப்பிரமணியெம். அரோல் கொரெலி இசை உறுத்தாமல் இருக்கிறது. சோட்டாபீம் பாடலும், காட்டுக்குள்ள கண்ணைவிட்டு பாடலும் கவனம் பெறுகின்றன.

Pasanga

பசங்க கெட்ட வார்த்தைகளைப் பேசுறதில்லை. கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுறாங்க. உங்க பசங்க தனிச்சு நிற்குறவங்க இல்ல. தனித்துவமா நிற்குறவங்க. மதிப்பெண்களை எடுக்கணும்னு நினைக்காம மதிப்பான எண்ணங்களை வளர்க்கணும். போன்ற பாண்டிராஜின் வசனங்களுக்கு கரவொலி கூடுகிறது.

குழந்தைகளை பெரிய மனிதர்களாக காட்ட அதிகம் முயற்சிக்கவில்லை என்பதற்காகவும், போகிற போக்கில் ரியாலிட்டி ஷோக்களின் ஆபத்தை சுட்டிக் காட்டியதற்காகவும் பாண்டிராஜுக்கு நன்றி.

குழந்தைகள் படத்தை முழுமையாக தர வேண்டும் என்பதற்காக நிறைய விஷயங்களை பாண்டிராஜ் அப்டேட் செய்திருக்கிறார். சூர்யாவின் குழந்தை ஃபிளாஷ்பேக்கில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

குழந்தைகளை தன் போக்கில் வளர விடுவதா? பெற்றோர்களுக்காக மாறுவதா? என்ற சிக்கல்களுக்கான தீர்வை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

கமர்ஷியல் சினிமாவினை தவிர்த்து குழந்தைகளுக்காக மட்டும் படம் எடுத்திருந்தால் இன்னமும் நன்றாக வந்திருக்கிமோ என்று தொன்றுகிறது.

குழந்தைகள், பெற்றோர் ஒன்றாக பார்க்கவேண்டிய படம் பசங்க 2.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here