Home Tamil Breaking News பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்

25

ராமநாதபுரம்: பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. இதையடுத்து ஒவ்வொருவராக மலர் தூவி தேவர் சிலையை வணங்கி மரியாதை செலுத்தினர்.

Related Posts