Home Tamil Cinema News மீண்டும் இணையும் கோலி - அனுஷ்கா ஜோடி

மீண்டும் இணையும் கோலி - அனுஷ்கா ஜோடி

136

anushka-story

இந்திய கிரிக்கெட் வீரர் வீராட் கோலியும், இந்தி நடிகையான அனுஷ்கா சர்மாவும் தீவிரமாக காதலித்தனர். அதனை தொடர்ந்து கடந்த 50 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடியது. இந்த போட்டியை பார்க்க அனுஷ்கா ஆஸ்திரேலியா சென்றார்.

அந்த போட்டியில் வீராட் கோலி சொற்ப ரன்னில் அவுட் ஆனார். இதற்கு அனுஷ்கா சர்மாதான் காரணம் என கூறி ரசிகர்கள் அவரை டுவிட்டரில் வறுத்தெடுத்தனர். இதற்கிடையே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பையில் கோலியின் ஆட்டம் அபாரமாக இருந்து வருகிறது. பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இதை பாராட்டிய ரசிகர்கள் இனிமேல் அனுஷ்கா சர்மா, வீராட் கோலியை தொந்தரவு செய்யாமல் இருந்தால் நல்லது என்று டுவிட்டரில் தெரிவித்து இருந்தனர். இதனால் கோபமடைந்த கோலி, இது வெட்கக்கேடானது என்று கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் அனுஷ்கா சர்மாவுடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது இருவரும் மனம் விட்டு பேசியதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை நள்ளிரவில் கொண்டாடிய போது கோலி, அனுஷ்கா சர்மாவுடன் பேசி இருக்கிறார்.