Home Tamil Movie Reviews பென்சில் – விமர்சனம்

பென்சில் – விமர்சனம்

360
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

கௌதம் மேனனின் உதவியாளர் மணி நாகராஜின் இயக்கத்தில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக உருமாறியுள்ள ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீ திவ்யாவுடன் இணைந்து நடித்திருக்கும் பென்சில் படம் ஒரு வழியாக வெளிவந்திருக்கிறது. இப்படத்தை கால்சன் மூவிஸ் S.P.ராகவேஷ் வழங்க PVS சினிமா வெளியிட்டுள்ளது.

2.7
இயக்கம்: மணி நாகராஜ்
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்
இசை: ஜி.வி. பிரகாஷ்
தயாரிப்பு: எஸ்பி ராகவேஷ்
நடிகர்கள்: ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா, ஷரிக்ஹாசன், விடிவி கணேஷ், ஊர்வசி, டிபி கஜேந்திரன்

கௌதம் மேனனின் உதவியாளர் மணி நாகராஜின் இயக்கத்தில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக உருமாறியுள்ள ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீ திவ்யாவுடன் இணைந்து நடித்திருக்கும் பென்சில் படம் ஒரு வழியாக வெளிவந்திருக்கிறது. இப்படத்தை கால்சன் மூவிஸ் S.P.ராகவேஷ் வழங்க PVS சினிமா வெளியிட்டுள்ளது.

pencilreview

டி.பி.கஜேந்திரன் நடத்தும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். படிப்பில் சிறந்து விளங்கும் இவர், தன்னுடன் படிக்கும் ஸ்ரீதிவ்யாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், ஸ்ரீதிவ்யாவோ ஜி.வி.பிரகாஷை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

இவர்களுடன் ஷாரிக் ஹசன் என்னும் மாணவன் படித்து வருகிறார். இவர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சினிமா நட்சத்திரத்தின் மகன். ஒரு மாணவன் பள்ளியில் என்ன செய்ய கூடாதோ, அதையெல்லாம் ஷாரிக் செய்து வருகிறார்.

16872_thumb_665

மேலும் ஆசிரியர், ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரிடம் பிரச்சனையும் செய்கிறார். ஷாரிக் இந்த பள்ளியில் படிப்பது பெருமை என்பதால் நிர்வாகம், இவர் செய்யும் தவறுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறது.

இந்த நிலையில், பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வழங்குவதற்காக ஊர்வசி வருகிறார். அப்போது பள்ளியை சோதனை செய்யும் போது, மர்மமான முறையில் ஷாரிக் இறந்து கிடக்கிறார். இதனால் பள்ளியில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

Pencil-movie-still

ஜி.வி.பிரகாஷ், ஷாரிக்கை கொலை செய்திருக்கலாம் என்று பள்ளி நிர்வாகம் சந்தேகப்படுகிறது. இறுதியில் ஷாரிக்கை கொலை செய்தது யார்? ஜி.வி.பிரகாஷ் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

G.V.பிரகாஷ் குமார் பள்ளி மாணவனாக கச்சிதம். பள்ளியின் முதல் நிலை மாணவராக மார்ஸ் கிரகத்தை ஆராய துடிக்கும் அவர், திடீரென துப்பறியும் சம்புவாக மாறி வம்பு செய்வதும், ஸ்ரீதிவ்யாவுடன் டூயட் பாடிட துடிப்பதும் நம்ப முடியாத சமாச்சாரங்கள்.

ஸ்ரீதிவ்யாவும் குட்டைப் பாவாடை மாணவியாக நச் சென்று இருக்கிறார். நன்றாகவே நடித்திருக்கிறார். அம்மணி கொலை நடந்த இடத்தில் பெரிய மனுஷியாக கொலையாளியை பிடிக்க G.V.யுடன் திட்டம் தீட்டுவதும், சக மாணவன் பிணம் அருகிலேயே GV மீது காதல் வயப்படுவதும் சற்றே அபத்தம்.

6

வில்லனாக நடித்திருக்கும் ஷாரிக் ஹசன், பார்ப்பவர்கள் கோபம் அடையும் அளவிற்கு வலுவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய வில்லத்தனம் ரசிக்க வைத்திருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களான டி.பி.கஜேந்திரன், வி டிவி கணேஷ், அபிஷேக் உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், G.V.பிரகாஷின் இசையும், படத்திற்கு பெரும்பலம்! ஆண்டனியின் எடிட்டிங் இயக்குனர் விருப்பபட்டதை பெல்லாம் செய்திருக்கிறது.

மொத்தத்தில் “பென்சில்” – பார்ப்பவர்களை கூர்தீட்டும்.