மக்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்ட ராதா ராஜன்

மக்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்ட ராதா ராஜன்

29

சென்னை மெரினாவில் கடந்த ஏழு நாட்களாக மிகப் பெரிய புரட்சி போராட்டம் நடந்து வருகிறது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். போலீஸ் தடியடி, கண்ணியிர் புகை குண்டு வீச்சு என எதற்கும் அஞ்சாமல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மெரினாவில் நடந்து வரும் போராட்டம் குறித்து பீட்டா ஆதரவாளரான ராதா ராஜன், “ஃப்ரிசெக்ஸ் என்று சொன்னால் கூட மெரினாவில் 5000 பேர் கூடுவார்கள்” என்று மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும்விதமாக பேசியிருந்தார். அவருடைய இந்தக் கருத்து அனைவரையும் கோபப்படுத்தியது.

அதனையடுத்து வாட்ஸ் அப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ராதா ராஜனுக்கு கடுமையான கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. மேலும் சென்னை பெசன்ட் நகரிலிருக்கும் அவரது வீட்டு முன்பு நேற்று பலர் கூடி தங்கள் எதிர்ப்பைக் காட்ட கோஷங்கள் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், ராதா ராஜன் “தனது கருத்துகள் மக்கள் தமிழக மக்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்.

நான் என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்போது ஒரு உதாரணத்துக்கு இப்படி பதில் உளறினேன். மாறாக மக்களின் மனதை காயப்படுத்துவது என்று நோக்கமல்ல. என் வார்த்தைகளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக என் வீட்டு முன்பு போராட்டம் நடத்த வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY