Home Tamil Movie Reviews போக்கிரி ராஜா – விமர்சனம்

போக்கிரி ராஜா – விமர்சனம்

402
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

கொட்டாவி ஒரு கெட்ட விஷயமாக கருதப்பட்டாலும், அதை வைத்து இந்தப்படத்தில் ஒரு புது வித மெசேஜை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. அதை ரசிக்கும் படி சொல்லி ”போக்கிரி ராஜா” படத்தினை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை காமெடியுடன் நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா.

2.7
இயக்கம்: ராம்பிரகாஷ் ராயப்பா
ஒளிப்பதிவு: ஆஞ்சநேயன்
இசை: டி.இமான்
தயாரிப்பு: P.T செல்வக்குமார்
நடிகர்கள்: ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ், யோகி பாபு , முனிஷ்காந்த், மனோபாலா

சமீபகாலமாக தோல்விகளை சந்தித்து வந்த ஜீவா வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தனது 25வது படத்தில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்திய இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவுடன் இணைந்து போக்கிரி ராஜாவாக களம் இறங்கியுள்ளார். டி.இமான் இசையில், ஆஞ்சநேயன் ஒளிப்பதிவில் முழு நீள காமெடிப் படமாக போக்கிரி ராஜா வெளிவந்திருக்கிறது.

83082_thumb_665

படத்தின் கதைப்படி, திரையுலகில் இதுவரை எத்தனையோ அதீத சக்தி பெற்ற மனிதர்கள் கதைகளை படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இப்படி தூக்கம் வருவதற்கு முன் வரும் கொட்டாவியை ஒரு சக்தியாக மையப்படுத்தி எதிலும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆம் நாயகன் ஜீவாவிற்கு தான் இந்த சக்தி. ஆரம்பத்தில் இது இவருக்கு பிரச்சனையாகவே உள்ளது.

இதனால் தன் காதலி, சில வேலைகள் என தன் வாழ்வின் முக்கியமான விஷயங்களை இழக்க நேர்கிறது. இந்தநிலையில் ஹன்சிகாவை சந்திக்கும் ஜீவாவிற்கு, ஹன்சிகா மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது.

Pokkiri-Raja-tamil-movie-jiiva-hansika-stills-4

அந்த நேரத்தில் ஹன்சிகாவின் ஹேண்ட் பேக்கைவழிப்பறி திருடன் ஒருவன் திருடிச்செல்ல, அவனைத் துரத்திச் சென்று அவன்பறித்துச் சென்ற ஹன்ஸின் பேக்கை திறந்து, ஜீவா பார்க்கும்போது, அதனுள்., சிகரெட், மது பாட்டில் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் இருப்பதை பார்க்கும் ஜீவா, அதிர்ச்சியாகிறார். ஹன்சிகா மீதும் தவறான அபிப்ராயம் கொள்கிறார்.

கொஞ்ச நாளில், ஹன்சிகா வேலைபார்க்கும் ஐ.டி அலுவலகத்திலேயே ஜீவாவுக்கும் வேலை கிடைக்கிறது. அங்கேயும் ஜீவாவின் கொட்டாவி கெட்டபழக்கம் தொடர, அங்கேயும் இவருக்கு வேலை பறிபோகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

Pokkiri-Raja-tamil-movie-jiiva-hansika-stills-2

பின் ஹன்சிகாவுடன் இணைந்து ஒரு பொதுசேவையில் ஈடுபடும் போது ஒரு பக்கம் சிபிராஜின் பகையை சம்பாதித்து மறுபக்கம் ஹன்சிகாவின் காதலை பெறுகிறார்.

அது சமயம், அந்த ஊரில் மிகப்பெரிய ரவுடியான சிபிராஜ், பொது இடத்தில் சிறுநீர் கழித்தார் என்பது கண்டு பொங்கி எழும் ஜீவா, அவர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து அவமானப்படுத்தி விடுகிறார். கூடவே சிபியை ஜெயிலுக்கும் அனுப்புகிறார்.

இந்த அவமானத்தை தாங்க முடியாத சிபிராஜ், இதற்கு காரணமான ஜீவாவை கொலை செய்ய திட்டமிடுகிறார். இச்சம்பவத்தால் சிபிராஜ், ஜீவ இருவருக்கும் பகை முற்றுகிறது.

 

இதை தொடர்ந்து ஹன்ஸிகா ஜீவாவின் மீது காதல் என்ன ஆனது? இறுதியில், இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? அல்லது, அதற்குள் சிபிராஜ் ஜீவாவை பழி தீர்த்தாரா? ஜீவாவின் கொட்டாவி கெட்ட பழக்கம் அவரது வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றத்தை கொண்டு வந்தது? இதை தொடர்ந்து தன் அசாத்திய கொட்டாவியை கொண்டு வில்லனை எப்படி ஜீவா சமாளிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜீவா இந்த படத்தில் வழக்கத்தைக் காட்டிலும் இளமைதுள்ளலுடன் நடித்திருக்கிறார். காமெடி காட்சிகளில் இவருடைய முகபாவனை ரசிக்கும்படி இருக்கிறது. காமெடி கதாபாத்திரத்தில், நக்கலும், நையாண்டியுமாக நடிப்பதில் கைதேர்ந்தவரான ஜீவா, இதில் பக்காவாக பளிச்சிட்டிருக்கிறார். யோகி பாபு , முனிஷ்காந்த், மனோபாலாவின் காமெடிகள் பல இடங்களில் ”சபாஷ்” எனவும் சில இடங்களில் சொதப்பல் எனவும் இருக்கிறது.

படம் முழுக்க மிகவும் பப்ளியாக வந்துபோகிற ஹன்சிகா,. வழக்கமாக ஹன்சிகாவை எதற்கெல்லாம் ரசிப்போமோ அது எல்லாம் இப்படத்தில் இருக்கிறது. படத்தில் வரும் பப்ளி பப்ளி பாடலுக்கு பட்டையை கிளப்பி இருக்கிறார். இருப்பினும், ஹன்சிகாவின் நடிப்பு பரவாயில்லை என்பது போல்தான் இருக்கிறது.

Pokkiri-Raja-Movie-Still

 

சிபிராஜ் வில்லனாக நடித்துள்ளார், ஆனால் இவரின் கதாப்பாத்திரத்தில் தான் வில்லத்தனமே இல்லை இருந்தாலும் அவரின் பங்கு முக்கியமானது. இது நாள் வரை கதாநாயகராக பார்த்து பழக்கப்பட்ட இவருடைய வில்லன் நடிப்பு, சிபியின் அப்பா சத்யராஜை நினைவுபடுத்துகிறது.

டி.இமானின் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கத்தூண்டுகிறது. குறிப்பாக ‘பப்ளி பப்ளி’ பாடல் வாவ் என வாய்பிளக்க வைக்கும் ரகம்! ஆஞ்சநேயனின் ஒளிப்பதிவு மிகவும் கலர்புல்லாக இருக்கிறது.

pokkiri-raja-movie

கொட்டாவி ஒரு கெட்ட விஷயமாக கருதப்பட்டாலும், அதை வைத்து இந்தப்படத்தில் ஒரு புது வித மெசேஜை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. அதை ரசிக்கும் படி சொல்லி ”போக்கிரி ராஜா” படத்தினை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை காமெடியுடன் நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா.

வித்தியாசமான கதை, நகைச்சுவை காட்சிகள், நடிகர்களின் பங்களிப்பு போன்றவை இருந்தாலும். சுவாரஸ்யமற்ற திரைக்கதை, நகைச்சுவையை மட்டுமே நம்பியது, படத்தில் தேவையற்ற சில திணிப்புகள் ஆகியவை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

மொத்தத்தில் போக்கிரி ராஜா – ஓகே ராஜா!