குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பெண்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் – அதிர்ச்சி வீடியோ

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பெண்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் – அதிர்ச்சி வீடியோ

33

தற்போது மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆதரவு அறப்போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் மீது இன்று காலை திடீரென போலீசார் தடியடி நடத்தினர். இந்த தாக்குதலுக்காக 15 ஆயிரம் போலீசாரை களமிறக்கியிருந்தது தமிழக அரசு.

போலீசார் நடத்திய தடியடிக்கு அஞ்சி ஆண்களும், பெண்களும், அருகேயுள்ள தெருக்களுக்குள் ஓடிச் சென்றனர். இதனால் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளுக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.

ஆனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த போலீசார், போராட்டக்காரர்களை விரட்டி சென்றனர். இதைப் பார்த்த குடியிருப்புவாசி பெண்கள் சிலர், கோபமடைந்தனர். அறவழி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தடியடி செய்வதா என்ற ஆதங்கத்தில், சில பெண்களே முன்னால் வந்து, போலீசாரை தடுத்தனர்.

அதையும் மீறி போலீசார் முன்னேறியதால் சிலர் பக்கெட்டிலிருந்து தண்ணீரை தூக்கி போலீசார் மீது ஊற்றினர். இதனால் கோபமடைந்த போலீசார், பெண்கள் மீது தடியடி நடத்தினர். போலீஸ்காரர்கள் வரிசையாக ஒவ்வொருவராக வந்து பெண்கள் மீது தடியடி நடத்தும் காட்சி ஒன்று பேஸ்புக்கில் வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது. 

blob:https://www.facebook.com/29d4663f-9bce-4407-91d3-f0df65cbd947

Related Posts

NO COMMENTS

LEAVE A REPLY