Home Tamil Cinema News நடிகர் சிம்புவை பிடிக்க 5 காவல்துறை தனிப்படைகள்!

நடிகர் சிம்புவை பிடிக்க 5 காவல்துறை தனிப்படைகள்!

141

Simbuசிம்பு ஒரே ஒரு பீப் பாடல் பாடிவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். இந்நிலையில் சிம்புவை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என தீர்ப்பு வந்தது.

இந்நிலையில் நேற்று சிம்புவுக்கு முன் ஜாமீன் கிடைத்திருந்தால் அவர் கைது நடவடிக்கையில் இருந்து எளிதாக தப்பி இருப்பார். ஆனால், அதற்கு மாறாக அவரது முன் ஜாமீன் மனு தள்ளியே வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிம்புவை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

போலீஸ் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக சிம்பு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சிம்பு தமிழகத்தை விட்டே தப்பி ஓடி தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படையினர் தேடி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சிம்பு எங்கு இருக்கிறார் என்பது பற்றி கேள்வியும் எழுந்துள்ளது. அவரது செல்போன் கடந்த 10 நாட்களாகவே சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பதில் சிக்கல் நீடிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சமீபத்தில் வந்த தகவலின்படி சிம்புவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும், அவர் தன் நண்பர்கள் வீட்டில் தலைமறைவாகியிருக்கலாம் என கூறப்படுகின்றது.

இதனால், அவரின் நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடப்பதாக பேசப்படுகின்றது.