மாணவர்கள் கல்வீசி தாக்கியதில் இன்ஸ்பெக்டர் மூக்கு உடைந்தது, மேலும் பலருக்கு காயம்

மாணவர்கள் கல்வீசி தாக்கியதில் இன்ஸ்பெக்டர் மூக்கு உடைந்தது, மேலும் பலருக்கு காயம்

26

சென்னை மெரினாவில் இன்று காலை போலீசார் தடியடி நடத்தி இளைஞர்களை விரட்டியடித்தனர். தகவல் அறிந்ததும் மேலும் பல இளைஞர்கள் மெரினா நோக்கி வந்தனர். திருவல்லிகேணியில் அவர்களை போலீசார் வழிமறித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து தடியடி நடத்த ஆரம்பித்தனர் போலீசார். சில இளைஞர்கள் திரும்பி ஓடினர். சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மூக்கு உடைபட்டு ரத்தம் வடிந்தது.

கற்கள் எங்கிருந்து வருகின்றது என்பதே தெரியாமல் போலீசார் தினரினர் மொத்தம் 5 போலீசார் காயமடைந்தனர். இதனால் சென்னை போர்க்களமாகியுள்ளது. மேலும், போலீசாரும் திருப்பி கற்களை வீசி தாக்கினர். இதில் மாணவர்களும் சிலர் காயமடைந்தாக கூறப்படுகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY