சென்னை கலவரத்தில் 140 வாகனங்கள் சேதமானதாக போலீஸ் தகவல்

சென்னை கலவரத்தில் 140 வாகனங்கள் சேதமானதாக போலீஸ் தகவல்

17

சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதோடு, சில வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்த நிலையில் சென்னையில் நேற்று 100க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 140 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.

50 காவல்துறை வாகனங்கள் உட்பட 90 அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் இதில் பல பொதுமக்களின் சொத்துக்களை சேதப்படுத்தியது போலீசார் தான் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த போராட்டத்தின் போது 35 போலீசார் மற்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Posts

NO COMMENTS

LEAVE A REPLY