Home Tamil Cinema News அபார்ட்மென்ட்டுக்குள் நுழைய நடிகை பூஜா மிஸ்ராவுக்கு தடை

அபார்ட்மென்ட்டுக்குள் நுழைய நடிகை பூஜா மிஸ்ராவுக்கு தடை

117

Wallpaper1

பாலிவுட் நடிகையும், மாடலுமான பூஜா மிஸ்ரா அவர் வசிக்கும் அபார்ட்மென்டுக்குள் நுழைய அதன் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன நடிகையும், மாடலுமான பூஜா மிஸ்ராவுக்கு புது பிரச்சனை கிளம்பியுள்ளது. அவர் மும்பை லோகந்த்வாலா பகுதியில் இருக்கும் வின்ட்சர் டவர் அபார்ட்மென்ட்டில் பெற்றோர், சகோதர், சகோதரியுடன் வசித்து வருகிறார்.

பூஜாவால் ஒரே தொல்லையாக உள்ளது. காரணமே இல்லாமல் அனைவருடனும் சண்டைக்கு பாய்கிறார். அவரின் சினிமா வாழ்க்கையை கெடுக்க அபார்ட்மென்ட்டில் உள்ளவர்கள் அவருக்கு சூனியம் வைத்துவிட்டதாக கூறுகிறார் என்றனர் அபார்ட்மென்ட் நிர்வாகத்தினர்.

ஒரு நாள் அவர் காரில் வெளியே கிளம்பினார். அவரது கார் டயரில் கல் தடுக்கியது. அவ்வளவு தான், தன் மீது பொறாமைப்பட்டு யாரோ கல்லை எறிந்ததாகக் கூறி பிரச்சனை செய்துவிட்டாராம் பூஜா மிஸ்ரா.

பூஜா தற்போது ஹாங்காங்கில் படப்பிடிப்பில் உள்ளார். அவர் தன் மீதான தடை குறித்து கூறுகையில் நான் ஒன்னும் பிரச்சனை செய்யவில்லை. நான் அந்த அபார்ட்மென்ட்டுக்குள் நுழைய மாட்டேன் என்று என் குடும்பத்தாரிடம் எழுதி வாங்கியுள்ளனர். இதை நான் சும்மா விட மாட்டேன். அவர்கள் தான் என்னை கொடுமைப் படுத்துகிறார்கள், நான் அவர்கள் மீது வழக்கு தொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here