Home Tamil Cinema News தனக்கு திருமணம் நடந்ததாக வந்த செய்தியை மறுத்த பூனம் பாஜ்வா

தனக்கு திருமணம் நடந்ததாக வந்த செய்தியை மறுத்த பூனம் பாஜ்வா

148

Poonam-Bajwa

நடிகை பூனம் பாஜ்வா தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்பட பல படங்களில் நடித்தவர் ஆவார். இவர் இப்போது குண்டு கத்திரிக்காய், போகி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அவரைப்பற்றி சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் நடிகை பூனம் பாஜ்வாவிற்கு திருமணம் நடந்துவிட்டதாக செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை பூனம் பாஜ்வா, அது முற்றிலும் தவறான செய்தியாகும்.

சமீபத்தில் தான் எனது தங்கைக்குத் திருமணம் நடைபெற்றது. அதை எனக்கு நடந்ததாக எண்ணி தவறான செய்தி வெளியிட்டுள்ளனர். எனக்கு திருமணம் நடக்கும் போது, இந்த உலகமே அறியும் வகையில் வெகு சிறப்பான முறையில் நடைபெறும் என்று கூறினார்.