Home Tamil Breaking News ஆந்திராவில் கனமழை..சென்னைக்கு நீர் வரத்து அதிகரிப்பு…

ஆந்திராவில் கனமழை..சென்னைக்கு நீர் வரத்து அதிகரிப்பு…

20

சென்னை : ஆந்திராவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக கருதப்படும் பூண்டி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 10 மில்லியன் கனஅடி அதிகரித்து 150 மில்லியன் கனஅடியாக உள்ளது. பூண்டி ஏரிக்கு தற்போது 121 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதே போன்று புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் இவற்றின் நீர்மட்டம் 903 மில்லியன் கனஅடியை தற்போது எட்டி உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 318 மில்லியன் கனஅடியாகவும், புழல் ஏரியில் 354 மில்லியன் கனஅடியாகவும், சோழவரம் ஏரியில் 81 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. கடந்த சில மாதங்களாக குடிநீருக்காக பெரும் அவதிப்பட்டு வந்த சென்னை மக்களுக்கு, இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.