Home Tamil Cinema News பிரபல மலையாள இயக்குனர் ஐ.வி சசி காலமானார்

பிரபல மலையாள இயக்குனர் ஐ.வி சசி காலமானார்

23

நடிகர் கமல்ஹாசனை வைத்து குரு, அலாவுதீனும் அற்புத விளக்கும் இயக்கிய மலையாள பட இயக்குனர் ஐ.வி சசி( வயது 69). இவர் இந்தி, மலையாளம், தமிழ் உள்பட 150 படங்களுக்கு மேல் இயக்கி உள்ளார். ரஜினிகாந்தை வைத்து காளி படத்தை இயக்கி உள்ளார்.

இன்று காலை சென்னையில் அவரது வீட்டில்அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லபட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

நடிகர் மம்முட்டியை தனது திரிஷ்னா படத்தின் மூலம் ஐ.வி சசி அறிமுகப்படுத்தினார்.

ஐ.வி சசி 1968 முதன் முதலில் கலியல்ல கல்யாணம் என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். அவளோடே ராவுகள் மூலம் பிரபலமானார் 1970 முதல் 1990 வரை பல வெற்றிபடங்களை தந்தவர்.அனுபவம், ஆள் கூட்டத்தில் தனியே,1921, மிருகய்யா, பலராம் விஷ் தாராதாஸ், ஆதியொழுக்குகள், தேவசுரம், இன்யெங்கிலும் வெற்றிபடங்களில் சில.

தேசிய ஒருங்கிணப்புக்காக இவரது ஆரூடம் படத்திற்கு 1982 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றார். சிறந்த இயக்குனருக்கான மாநில விருத்து இரண்டுமுறை பெற்று உள்ளார்.2015 ஆம் ஆண்டு ஜே. சி. டேனியல் விருது பெற்றார்.2013 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்று உள்ளார். சினிமா நடிகை சீமா இவரது மனைவி. அனு மற்றும் அனி என 2 குழந்தைகள் உள்ளனர்.