பிரபுதேவா நடித்துவரும் ‘தேவி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபுதேவா நடித்துவரும் ‘தேவி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

84

 

Prabhu deva Starring Devi Movie

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.எல். விஜய் இயக்கும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், வில்லனாக அமலாபாலின் தம்பி அபிஜித் பால் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தை பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் அவரே தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது.

படத்தின் டீசர் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் நிலையில், வரும் செப்டம்பர் 9ம் தேதி முதல் இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY