Home Tamil Cinema News திருமண போட்டோக்களை ஏலத்தில் விடும் ப்ரீத்தி ஜிந்தா

திருமண போட்டோக்களை ஏலத்தில் விடும் ப்ரீத்தி ஜிந்தா

143

Preity-wedding

பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவை சேர்ந்த ஜீன் குட்இனப் என்பவரை காதலித்துவந்தார், முன்னதாக இவர்கள் இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இதனை ப்ரீத்தி ஜிந்தா கோபத்துடன் மறுத்தார். எனக்கு ஒன்றும் தற்போது திருமணம் இல்லை, அதை நான் முடிவு செய்து கொள்கிறேன் என்று அனைவரிடமும் கூறினார்.

பின்னர் ப்ரித்தி ஜிந்தா தனது காதலர் ஜீன் குட்இனப்புடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் குடும்பத்தார், மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்க பலர் ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில் ப்ரீத்தி தனது திருமண புகைப்படங்களை ஏலத்தில் விடவுள்ளாராம். ஏலத்தில் கிடைக்கும் பணத்தை ப்ரீத்தி ஜிந்தா பவுன்டேஷன் மூலம் சமூக சேவைக்காக செலவு செய்யவுள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here