Home Tamil Cinema News அந்த மாதிரியான ஒரு காட்சிக்காக படத்திலிருந்து விலகிய சாய் பல்லவி!

அந்த மாதிரியான ஒரு காட்சிக்காக படத்திலிருந்து விலகிய சாய் பல்லவி!

187

sai-pallavi

சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்ததால் தற்போது தமிழக இளைஞர்களின் பேவரட் ஹீரோயின் ஆகிவிட்டார். இவர் நடித்த ப்ரேமம் தமிழகத்தில் 250 நாட்களை கடந்து ஓடியது.

அதனால் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் அவருக்கு பல வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில் சாய் பல்லவி மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதாக இருந்து பின் அதிலிருந்து விலகியதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

மணிரத்னம் படத்திலிருந்து விலகியதற்கு சாய் பல்லவி பல காரணங்கள் கூறினாலும், தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று மணிரத்னம் படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சி ஒன்று இருப்பதால் தான் சாய் பல்லவி அதிலிருந்து விலகி விட்டார் என்று குறிப்பிட்டுள்ளது.