பிரேமம் திரைப்படம் மீண்டும் திரையிடப்படுகிறது

பிரேமம் திரைப்படம் மீண்டும் திரையிடப்படுகிறது

95

premam

மலையாள படமான ப்ரேமம் கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை அல்போன்ஸ் புத்ரன் இயக்கியிருந்தார்  இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க, அனுப்பமா, சாய் பல்லவி, மடோனா ஆகியோர் ஹீரோயினாக நடித்திருந்தனர்.

இந்தப் படம் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது, கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு மேல் இப்படம் ஓடி சாதனை படைத்தது.

தற்போது இந்தப்ப்[அடம் திரையரங்கை விட்டு எடுக்கப்பட்டுவிட்டாலும், ரசிகர்களின் வரவேற்பை ஏற்று மீண்டும் இந்தப் படத்தை ரீரிலிஸ் செய்யவுள்ளனராம், அதுமட்டுமின்றி அதிக திரையரங்குகள் இப்படத்தை திரையிடவும் முன்வந்துள்ளனராம்.

NO COMMENTS

LEAVE A REPLY