ஜனாதிபதி கையொப்பம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட அவசர சட்டம்!

ஜனாதிபதி கையொப்பம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட அவசர சட்டம்!

29

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் இறுதியாக அது சட்ட அதிகாரம் பெற, குடியரசுத் தலைவரின் கையொப்பமும் கட்டாயம் தேவை. முன்பு ஏற்கனவே திமுக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் ஜனாதிபதி கையொப்பம் இல்லாத காரணத்தினால் தான் உச்ச நீதிமன்றம் ஜல்லிகட்டுக்கு தடைவிதித்தது.

தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு கொண்டு வரவிருக்கும் அவசர சட்டத்திற்கு, மத்திய அரசின் மூன்று துறைகளின் ஒப்புதல் பெற்றால் மட்டும் போதாது; இறுதியாக அது சட்ட அதிகாரம் பெற, குடியரசுத் தலைவரின் கையொப்பமும் கட்டாயம் தேவை.

இல்லாவிட்டால் இதை வைத்து, பிறகு சட்டச் சிக்கல் ஏற்படலாம். எனவே, தமிழக அரசு உடனடியாக குடியரசுத் தலைவர் கையொப்பம், ஒப்புதலைப் பெறுவதும் அவசரம் – அவசியம் என்று சில சட்ட நிபுணர்களின் கருத்தும் உள்ளதால், தமிழக அரசு இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY