Home World News ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் ‘ஷின்சோ அபே’ வெற்றி! மோடி ட்விட்டரில் வாழ்த்து!

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் ‘ஷின்சோ அபே’ வெற்றி! மோடி ட்விட்டரில் வாழ்த்து!

111

ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபே தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 465 இடங்களில் 312 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் ஷின்சோ அபே மீண்டும் ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்நிலையில், அவருக்கு, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.