Home Tamil Breaking News காந்திஜி நினைவிடத்தில் பிரதமர்,ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை..

காந்திஜி நினைவிடத்தில் பிரதமர்,ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை..

25

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 149வது பிறந்த நாள், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவர்களது நினைவிடங்களில் தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போன்ற தலைவர்களும் காந்தியடிகளின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் ஏராளமான பள்ளி மாணவ–மாணவிகளும் தேசத்தந்தைக்கு மரியாதை செலுத்தினர்.முன்னதாக ராஜ்காட்டில் நிறுவப்பட்டு இருந்த காந்தியடிகளின் 1.80 மீட்டர் உயரமுள்ள வெண்கல சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டு உள்ள செயல்விளக்க மையம் ஒன்றையும் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார்.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், “காந்தி ஜெயந்தியில் மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். அவரது கொள்கைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களை ஊக்கமளிக்கிறது” என பதிவிட்டுள்ளார். இதேபோல் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியும், மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Related Posts