Home Tamil Cinema News கர்ணனாக நடிக்கும் பிருத்விராஜ்

கர்ணனாக நடிக்கும் பிருத்விராஜ்

138

 

Karnan-Malayalam-Movie-Posters-Prithviraj-CInemaDaddy-1 (1)

பிருத்விராஜ் நடிப்பில் தற்போது நான்கு மலையாளப் படங்கள் ஹிட்டாகி உள்ளன. சமீபத்தில் வெளியான பாவடை படமும் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிருத்விராஜ் நடித்த என்னுநின்டெ மொய்தீன் படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல், கர்ணனின் கதையை படமாக எடுக்க உள்ளார்.

இதில் கர்ணனாகப் பிருத்விராஜ் நடிக்கிறார். இதுபற்றி பிருத்விராஜ் கூறும்போது, ‘உலகிலேயே மிகப்பெரிய ஹீரோவாக கர்ணைனத்தான் கருதுகிறேன். அந்த மாபெரும் வீரனின் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. இப்போது அது நனவாகி உள்ளது’ என்றார்.

இயக்குனர் விமல் கூறும்போது பிறந்தபோது தாயால் நிராகரிக்கப்பட்ட கர்ணனின் வாழ்க்கையை பல கோணங் களில் காண முடியும். அவற்றில் என் கோணத்தில் இந்தப் படத்தை உருவாக்குகிறேன். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்துவருகிறது. இந்தி மற்றும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here