திருமணம் குறித்த ரசிகர்களின் கருத்தால் பிரியாமணி அதிர்ச்சி!

திருமணம் குறித்த ரசிகர்களின் கருத்தால் பிரியாமணி அதிர்ச்சி!

127

Priyamani Engagement

நடிகை பிரியாமணிக்கும் தொழில் அதிபரும், காதலருமான முஸ்தபா ராஜூடன் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடந்தது. சஸ்பென்ஸாக வைத்திருந்து நிச்சயதார்த்தம் முடிந்தபிறகு தனது இணையதள பக்கத்தில் ஜோடி புகைப்படம் வெளியிட்டார்.

விரைவில் இருவரும் தங்களது திருமணத் தேதியை அறிவிக்கவுள்ளனர். இந்த நிலையில் என்னுடைய சொந்த வாழ்வு குறித்து நான் யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை என பிரியாமணி கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது இணையதள பக்கத்தில் ‘என்னுடைய நிச்சயதார்த்தம் பற்றி நான் பகிர்ந்து கொண்டது ஒரு புதிய வாழ்வை நான் துவங்குகிறேன். அதற்கு உங்கள் எல்லோரின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையால்தான். ஆனால் எனது நிச்சயதார்த்தம் குறித்து ரசிகர்கள் மிக மோசமாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மக்கள் தங்களை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும். எனது சொந்த வாழ்க்கை குறித்து எனது பெற்றோர் மற்றும் என்னுடைய வருங்கால கணவர் தவிர வேறு யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்று கூறியிருக்கிறார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY