Home Tamil Cinema News ஆஸ்கரில் ஜொலித்த பிரியங்கா சோப்ரா!

ஆஸ்கரில் ஜொலித்த பிரியங்கா சோப்ரா!

122

priyanka-chopra

இந்தியா சார்பில் விருதுகள் அளிக்கும் நபராக இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இதன் மூலம் மற்ற ஹாலிவுட் கலைஞர்களுடன் இணைந்து இந்த விழாவில் கலந்து கொள்ளும் அதிர்ஷ்டம் அவருக்குக் கிடைத்தது.

மேலும் இந்த விழாவில் வெள்ளை நிறத்தினாலான கண்ணாடி உடை ஒன்றை அணிந்து இடுப்பில் ஒரு சிறிய பெல்ட்டுடன் வந்த பிரியங்கா சோப்ரா அனைவரது கவனத்தையும் ஒருசேரக் கவர்ந்தார். சிவப்பு நிறக் கம்பள விரிப்பில் தனது மனம்கவரும் புன்னகையுடன், பிரியங்கா நடந்து வந்தபோது கேமிராக்கள் போட்டிபோட்டு அவரை மொய்த்தன.

29-1456735982-oscar-600

விழாவில், சுமார் 80 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன், நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டிருக்கிறார். சிறந்த படத் தொகுப்புக்கான விருதை மார்கரெட் சிக்ஸெல்லுக்கு பிரியங்கா சோப்ரா வழங்கினார்.

இந்த நிலையில் தப்போது ஆஸ்கார் விருது பற்றிய தேடுதல்களின் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது Google. அதில் DiCaprioவிற்கு பிறகு அதிகம் தேடபட்டவர்களில் பிரியங்கா சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளாராம்.