Home Tamil Cinema News 40 நாட்கள் விளம்பர படங்களில் நடிக்க பிரியங்காவுக்கு ரூ.100 கோடி சம்பளம்!

40 நாட்கள் விளம்பர படங்களில் நடிக்க பிரியங்காவுக்கு ரூ.100 கோடி சம்பளம்!

138

Priyanka-Chopra

தென்னிந்திய நடிகைகளை விட இந்தி பட கதாநாயகிகள் பல மடங்கு சம்பளம் வாங்குகிறார்கள். அந்த வ்பரிசையில் பிரியங்கா சோப்ரா ஒரே நேரத்தில் 24 விளம்பர படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படங்களில் நடிக்க அவர் ரூ.100 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இந்தி பட உலகில் பேசப்படுகிறது.

பழரச பானங்கள் தயாரிக்கும் நிறுவனம், நகைக்கடைகள், தனியார் விமான நிறுவனம், ஆன் லைன் வர்த்தக நிறுவனங்கள் போன்றவை இதில் அடக்கம். பழரச பானம் தயாரிக்கும் நிறுவனம் மட்டும் பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.6 கோடி கொடுத்து விளம்பர படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த விளம்பர நிறுவனங்களுக்கான படப்பிடிப்பு மும்பையில் தற்போது நடந்து வருகிறது. 40 நாட்கள் இந்த நிறுவனங்களுக்கு கால்சீட் கொடுத்து பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். இதுபோல் மற்ற இந்தி நடிகைகளும் விளம்பர படங்களில் நடிக்க கோடிகோடியாய் வாங்குகிறார்களாம்.