Home Tamil Cinema News ஆஸ்கர் விருது வழங்கும் பிரியங்கா சோப்ரா!

ஆஸ்கர் விருது வழங்கும் பிரியங்கா சோப்ரா!

189

priyanka-chopra

ஆஸ்கர் விருதுகள் உலகலாவிய சினிமா துறையில் மிகப்பெரிய விருது வழங்கும் விழா நிகழ்வாக உள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வு இம்மாதம் 28-ம் தேதி அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் உள்ள ஹைலேன்ட் சென்டரில் நடைபெறுகிறது.

கடந்த 88-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் பங்கேற்பார் என விருது கமிட்டி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆஸ்கர் விருது விழாவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, விருதுகளை வழங்குவோரின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் பிரியங்கா சோப்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க திரைப்பட நடிகர்கள் பேரவையின் சகா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் நடிகருக்கான விருதினை நடிகர் பெட்ரோ பஸ்கல் என்பவருக்கு பிரியங்கா சோப்ரா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.