மன்னிப்பு கேட்கும் வரை விஷால் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது – தயாரிப்பாளர்கள் சங்கம் மிரட்டல்

மன்னிப்பு கேட்கும் வரை விஷால் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது – தயாரிப்பாளர்கள் சங்கம் மிரட்டல்

88

Producers Association Wants Vishal to Apologise for his Comment

நடிகர் விஷால் அளித்த பேட்டி ஒன்றில், ‘தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தான் காரணம். திருட்டு வி.சி.டி.யை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆக்கப்பூர்வமான வேலைகள் எதுவும் நடக்கவில்லை. எப்படி நடிகர் சங்கத்தை கையில் எடுத்தோமோ? அதேபோல், ஜனவரியில் நடக்க இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலிலும் போட்டியிடுகின்ற சூழல் எங்களுக்கு வந்துள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

விஷாலின் இந்தப் பேட்டி தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனால் விஷால் இந்த பேட்டிக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், கத்திச்சண்டை படத்திற்கு பிறகு அவருடைய எந்த படத்திற்கும் தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு அளிக்காது என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY