Home Tamil Breaking News கந்துவட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை: புதுச்சேரி முதல்வர்

கந்துவட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை: புதுச்சேரி முதல்வர்

18

புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி பெரிய மார்க்கெட் டிலும் கந்துவட்டி வசூலிக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.

ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினால் ஒரு நாளைக்கு ₹200 வட்டியாக கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 10 நிலைகளாக வட்டி வசூலிக்கப்படுவதாக புகார் வந்துள்ளது. வட்டிக்கு பணம் கொடுத்து விட்டு மிரட்டும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

வங்கிகள் தாராளமாக பணம் கொடுக்கும் போது கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி கொள்ள கூடாது. கந்துவட்டி தொழில் நடத்துவோர் சிறைக்கு அனுப்பப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.