Home Tamil Movie Reviews புகழ் – விமர்சனம்

புகழ் – விமர்சனம்

445
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

ஜெய், சுரபி, RJ பாலாஜி, கருணாஸ் நடிக்க விவேக் சிவா – மெர்வின் சாலமன் இரட்டையர் இசையில், ஜி.பி.வெங்கடேஷின் படத்தொகுப்பில், ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில் ரேடியன் ஈ மீடியா வருண் மணியன் வழங்க, மணிமாறனின் எழுத்து, இயக்கத்தில், சுஷாந்த் பிரசாத் தயாரித்திருக்கும் படம் "புகழ்".

2.8
இயக்கம்: மணிமாறன்
ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ்
இசை: விவேக் சிவா – மெர்வின் சாலமன்
தயாரிப்பு: சுஷாந்த் பிரசாத்
நடிகர்கள்: ஜெய், சுரபி, RJ பாலாஜி, வெங்கட், கருணாஸ், சுரபி, பிறைசூடன், மாரிமுத்து

ஜெய், சுரபி, RJ பாலாஜி, கருணாஸ் நடிக்க விவேக் சிவா – மெர்வின் சாலமன் இரட்டையர் இசையில், ஜி.பி.வெங்கடேஷின் படத்தொகுப்பில், ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில் ரேடியன் ஈ மீடியா வருண் மணியன் வழங்க, மணிமாறனின் எழுத்து, இயக்கத்தில், சுஷாந்த் பிரசாத் தயாரித்திருக்கும் படம் “புகழ்”.

pugazh-01

புகழ், தவறு எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்க வேண்டும் என்று தன் அப்பா, மாமா வளர்ப்பில் வளர்ந்தது மட்டுமின்றி ஊருக்கு ஒரு ஹீரோவாகவும் வலம் வருகிறார். சிறு வயதிலிருந்தே தன் ஊரில் இருக்கும் ஒரு மைதானத்தில் ஓடி ஆடி சந்தோஷமாக தன் நண்பர்களுடன் ஜெய் பொழுதை கழிக்கின்றார்.

சாதிய அரசியல் பிரமுகர் உதவியுடன் கல்வி அமைச்சர் அந்த ஊரில் உள்ள மைதானத்தை கைப்பற்றி ஒரு பில்டிங் கட்ட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால், ஜெய் மற்றும் அவரது நண்பர்கள் அது நாங்கள் வாழ்ந்து, விளையாடி வரும் மைதானம் என கங்கனம் கட்டி போராடுகிறனர்.

Jai-Surabhi-Pugazh-movie-latest-stills-7

 

தன் விரலை வைத்து தன் கண்களையே குத்துவது போல், ஜெய்யின் நண்பருக்கு அரசியல் ஆசைகாட்டி மேலும், அவரின் பணத்தேவையை பூர்த்தி செய்து அந்த மைதானத்தை பிடிக்க பார்க்கின்றார்.

இருப்பினும், எத்தனை சோதனை வந்தாலும் அந்த மைதானத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ஜெய், இத்தனை பெரிய அரசியலை தாண்டி வெற்றி பெற்றாரா என்பதே மீதிக்கதை.

Jai-in-Pugazh-movie-stills-3

ஜெய் – புகழாகவே மாறி வெளுத்து கட்டியிருக்கிறார். லவ், ஆக்ஷன் எல்லாவற்றிலும் தனது நடிப்பு திரனை மீண்டும் நிரூபித்துள்ளார். எனக்கு இந்த அரசியல்லயும், அரசியல்வாதி மேலயும் நம்பிக்கை இல்லன்னா… அதற்கு பதில் ஏதாவது கோயிலுக்கு வேண்டிகிட்டு… மொட்டை போடுறதுல கூட நல்லது நடக்கும்னு நம்புறவன் நான்.. ‘என்று நரம்பு புடைக்க ஜெய் பேசும் இடத்தில் தியேட்டர் அதிர்கிறது.

கதாநாயகி சுரபி சும்மா வந்து போனாலே படம் பார்க்கும் ரசிகர்கர்களுக்கு காதல் ஹார்மோன் சுரபிகள் ஊற்றெடுக்கின்றன. என்ன, எப்ப பார்த்தாலும் எம்.ஜி.ஆர் பாட்டே பாத்தகிட்டு, கொஞ்சம் ஜெமினி பட்டும் பாரு என சேனல் மாற்றுவது, அருமை.

Jai-Surabhi-Pugazh-movie-latest-stills-4

தம்பிக்காக தாஸை ஒரு கட்டத்தில் எதிர் இடத்திலும், மக்கள் பிரச்சினைக்காக உண்டியல் ஏந்தி ரோடுரோடாக போராடிய காலம் எல்லாம் மாறிப்போச்சு, சாதாரண கவுன்சிலர் கூட பார்சினோ காரில் வந்து பந்தாவா இறங்குறான். நீசைக்கிளுக்கு காத்தடிக்க முடியாம கடன் சொல்லிட்டு நிக்கிற என்று சிவப்பு துண்டு புரட்சியாளர் பிறைசூடனிடம் கொந்தளிக்கும் இடத்திலும் கவனிக்க வைக்கிறார் கருணாஸ்.

வில்லனாக வரும் சேர்மன் தாஸ்ஸாக ‘கண்ணும் கண்ணும்’ மாரிமுத்து, அவரது பாஸ் மினிஸ்டர் கமலா தியேட்டர் வள்ளிநாயகம், பிறை சூடன், ஜெய்யின் நண்பர்கள் ஆர்-ஜே.பாலாஜி, வெங்கட் உள்ளிட்டவர் களும் கச்சிதமாக நடித்துள்ளனர்.

IndiaTv71a5f0_pugazh-tamil-film

வேல்ராஜின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளையும் தெளிவாக படப்பிடித்து அசத்துகின்றது. விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் பெரிதும் கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளனர்.

மொத்தத்தில் புகழ் – இளைஞர்களுக்கு புகழ் சேர்க்கும் படம்.