Home Tamil Breaking News ரூபாய் நோட்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் ‘லோகோ’..

ரூபாய் நோட்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் ‘லோகோ’..

28

புதுடெல்லி : பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் புதிதாக வெளியிடப்பட்ட ரூ.500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளில், பிரதமர் மோடி கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமான (‘லோகோ’) மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி உருவம் இடம்பெற்று உள்ளது. ரூபாய் நோட்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னம் இடம் பெற்றது எப்படி? என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் ஒருவர் விளக்கம் கேட்டு இருந்தார்.

அதற்கு ரிசர்வ் வங்கி, தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவு 8 (1 ஏ)–யின் கீழ், ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் அதில் உள்ள பதுகாப்பு அம்சங்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்று பதில் அளித்து இருக்கிறது.

Related Posts