Home Tamil Cinema News பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பும் ராய் லட்சுமி

பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பும் ராய் லட்சுமி

140

raai-lakhsmi-hot

நடிகை ராய் லட்சுமி பாலிவுட் படம் ஒன்றின் முதன்மை கதாப்பாத்திர்த்தில் நடிக்கிறார். 2004ம் ஆண்டில் நேகா தூபியா நடிப்பில் வெளியான படம் ‘ஜூலி’. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘ஜூலி-2’ என்ற பெயரில் உருவாகி உள்ளது. படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா இருப்பினும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராய் லட்சுமி மட்டுமே நிற்கிறார்.

வாழ்வியல் சூழ்நிலைகளால் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண் மீண்டும் ஒரு குடும்ப வாழ்க்கையில் நுழைகையில் என்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறாள் என்பதே முதலில் வந்த ஜூலி படத்தின் கதை. இரண்டாவது படத்தின் கதையும் அதேபோன்று ஒரு பெண்ணின் சிக்கலான வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் என்றே தெரிகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராய் லட்சுமியின் பின்புற டாப்லெஸ் போஸ் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ராய் லட்சுமியின் முதல்படம் பாலிவுட் படம் இதுவாகும். முதல்படத்திலேயே இவர் போல்ட்டாக நடித்திருப்பது இங்குள்ள நடிகர்கள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில்தான் கடற்கரை மணலில் வெறும் புத்தகத்தை மறைத்தபடி படுத்துள்ளார் ராய் லட்சுமி. இது இவரது முதல் பாலிவுட் படமாகும். தீபக் சிவதாசினி இயக்கியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

raai-lahsmi