Home Tamil Cinema News பத்மஸ்ரீ விருதிற்கு நான் தகுதியானவன் இல்லையென்று கூறும் ராஜமௌலி

பத்மஸ்ரீ விருதிற்கு நான் தகுதியானவன் இல்லையென்று கூறும் ராஜமௌலி

91

SS_Rajamouli

இயக்குனர் ஷங்கருக்கு மேல் பாகுபலி படத்தில் பிரம்மாண்டத்தை காட்டியவர் ராஜமௌலி. பாகுபலி படத்தில் பிரம்மாண்டத்தின் உச்சிக்கே சென்று உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர். இந்திய அளவில் வசூல் சாதனை படைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்து வருகிறார் ராஜமௌலி.

மத்திய அரசு நடிகர் ரஜினிக்கு பத்மவிபூஷன் விருது அறிவித்துள்ள நிலையில், ராஜமௌலியின் படைப்பாற்றலை போற்றும் விதமாக அவருக்கு நேற்று பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இந்த உயரிய விருது தனக்கு கிடைத்துள்ளது பற்றி அவர் ட்விட்டரில் தெரிவித்த கருத்து அனைவரையும் ஆச்சர்யபடவைத்துள்ளது.

அவர் கூறுகையில் இந்த விருதிற்கு நான் தகுதியானவன் என்று தோன்றவில்லை. அப்படி என்ன சாதனை செய்துவிட்டேன். ரஜினி மற்றும் ராமோஜி ராவ் ஆகியோருக்கு பத்மவிபூஷன் கொடுத்ததில் அர்த்தம் உள்ளது. அதே சமயம் பத்மஸ்ரீ கிடைத்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here