Home Tamil Cinema News மழை எதிரொலி – ரஜினி முருகன், ஈட்டி ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

மழை எதிரொலி – ரஜினி முருகன், ஈட்டி ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

501

chennai rain flood

சென்னையில் கடந்த சில நாட்களாக அடை மழை பொழிந்து வருகிறது. இந்த மழையால் சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் டிசம்பர் 4ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்யப்பட இருந்த சிவகார்த்திக்கேயனின் ரஜினி முருகன், அதர்வா நடித்த ஈட்டி படங்களின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

An Indian Navy helicopter drops food packets to people surrounded by flood waters following heavy rains in Chennai, Tamil Nadu state, India, Tuesday, Nov.17, 2015. Incessant rains that lashed the city since Saturday night flooded several parts of Chennai. (AP Photo/Arun Sankar K)

சென்னையில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி விடாமல் மழை கொட்டி வருகிறது. 40 மணிநேரத்திற்கும் மேலாக விடாமல் கொட்டிய அடைமழையால் நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இருப்பிடங்களை வெள்ளம் சூழ மக்கள் உடைமைகளை விட்டு சொந்த ஊரிலேயே அகதிகளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மழை நின்று இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு இப்படங்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனால் மற்றப் பகுதி திரையுலக ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.