Home Tamil Cinema News ‘ரஜினி முருகன்’ பொங்கலுக்கு வெளியாகிறது!

‘ரஜினி முருகன்’ பொங்கலுக்கு வெளியாகிறது!

255

pen movies

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன்.ராம் இயக்கி இருக்கும் படம் ’ரஜினி முருகன்’. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கடன் சிக்கலில் சிக்கியதால், இப்படம் தயாரானாலும் வெளியீட்டில் சிக்கல் நீடித்து வந்தது. பிறகு ஈராஸ் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் பெரும் தொகையை கொடுத்துவிட்டதால், விரைவில் வெளியாகும் என்று திருப்பதி பிரதர்ஸ் தெரிவித்தார்கள்.

டிசம்பர் 4ம் தேதி வெளியாக இருந்த ‘ரஜினி முருகன்’, சென்னை வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொங்கலுக்கு வெளியீடு என்று விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், சில காரணங்களால் மீண்டும் படல் விளம்பரப்படுத்துவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது ‘ரஜினி முருகன்’ பட வெளியீட்டில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் கை கோத்திருக்கிறது பென் மூவிஸ் என்ற மும்பை பட நிறுவனம். இந்நிறுவனம் பல்வேறு இந்தி திரைப்படங்களை விநியோகம் செய்திருக்கிறது.

பென் மூவிஸ் நிறுவனத்தின் லோகோவுடன் தற்போது ‘ரஜினி முருகன்’ பொங்கலுக்கு வெளியாகும் என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். திரையரங்க ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இன்று தொடங்கி நடைபெற்று வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.