Home Tamil Cinema News ‘ரஜினிமுருகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘ரஜினிமுருகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

177

Rajini-Murugan

‘ரஜினிமுருகன்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் இன்றைய தினசரி நாளிதல்களிலும், இணையதளங்களிலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரஜினிமுருகன் திரைப்படம் கடந்த 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு முன்பதிவும் தொடங்கியது. இந்நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.